ஜேர்மன் கிழக்கு மாநிலத்தில் வலதுசாரி கட்சி பெரும் வெற்றி!

ஜேர்மன் கிழக்கு மாநிலமான சாக்சனி-அன்ஹால்ட்டில், தீவிர வலதுசாரி கட்சியான ‘ஜேர்மனிக்கான மாற்று’ (Alternative for Germany ), தனது முக்கிய அரசியல் போட்டியாளர்களை வெகுவாகப் பின்தள்ளி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

பழமைவாதக் கட்சியான சிடியு (CDU) 17.2% வாக்குகளைப் பெற்ற நிலையில், தீவிர வலதுசாரி கட்சி 43.8% வாக்குகளைப் பெற்றுள்ளது.

இருப்பினும், தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையை இது பெறவில்லை என்பதால் , மாநிலத்தை யார் நிர்வகிப்பது என்பது குறித்த சிக்கலான பேச்சுவார்த்தைகள் இனி நடைபெறவுள்ளன.

அந்த மாநிலத்தில் AfD கட்சியின் செல்வாக்குமிக்க தலைவரான உல்ரிச் சீக்மண்ட் (Ulrich Siegmund), இது ஒரு “பரபரப்பான” வெற்றி என்று கூறியதுடன், ஆட்சி செய்வதற்கான ஆணையைத் தங்கள் கட்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜெர்மனியின் எந்தவொரு மாநிலத்திலும் தீவிர வலதுசாரி கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில்லை.

மாநில அளவில் ஆட்சி அமைப்பது என்பது காவல் துறை, உள்ளூர் கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான அதிகாரங்களைக் கொண்டிருப்பதாகும்.

சாக்சோனி-அன்ஹால்ட் 2.1 மில்லியன் என்ற சிறிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. 83 இடங்களைக் கொண்ட மாநில நாடாளுமன்றத்தில், AfD கட்சி தற்போது 39 இடங்களைப் பெறும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles