த.வெ.க. ஆட்சி அமைக்க தி.மு.க. இடையூறு செய்யாது

த.வெ.க. ஆட்சி அமைக்க தி.மு.க. இடையூறு செய்யாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைக்க 6 மாதங்களுக்கு தி.மு.க.வினால் எந்த இடையூறும் இருக்காது என தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

தி.மு.க. விரைவான ஓர் அரசியல் அமைப்பு நெருக்கடியையோ மற்றொரு தேர்தலையோ விரும்பவில்லை. புதிதாக அமையவிருக்கும் அரசு தி.மு.க. அரசின் திட்டங்களையும் தொடரவேண்டும். தி.மு.க.வின் தேர்தல் அறிக்றையில் அளித்த வாக்குறுதிகiயும் நிறைவேற்றவேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டமும் தொடரப்பட வேண்டும்.

இருப்பினும், பெண்களுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக விஜய் அளித்திருக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவது கடினம். நாங்கள் செய்ததுபோல, குறைந்தபட்சம் ரூ. 1,000 கொடுங்கள்.

2021 தேர்தலில் தி.மு.கவின் வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றி விட்டோம். மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாகவே, நீட் தேர்வு ரத்து போன்ற சிலவற்றைச் செய்ய முடியவில்லை.

இந்தத் தேர்தலிலும்கூட, எங்களால் நிறைவேற்றக்கூடியவற்றை மட்டுமே வாக்குறுதிகளாக அளித்தோம்.

ஆனால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்களை த.வெ.க. வழங்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படி செய்தால், எங்களுக்கு மகிழ்ச்சிதான்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி ஆட்சியமைப்பதில் த.வெ.க. மும்முரம் காட்டி வருகிறது.

இதனிடையே, தி.மு.கவும் அ.தி.மு.கவும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கவிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இந்த நிலையில், த.வெ.க. ஆட்சிக்கு தி.மு.க. எந்த இடையூறும் செய்யாது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தனது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles