த.வெ.க. பாடலை ரிங்டோனாக வைத்திருந்த இளைஞர் மீது தாக்குதல்

த.வெ.க. இளைஞர் மீது தாக்​குதல் நடத்​தி​ய​ இரு​வரை பொலீ​ஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஓட்​டேரி எஸ்​.எஸ்​.புரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் சொலமன். இவர் த.வெ.க. உறுப்​பினர் என கூறப்​படு​கிறது. இவர் தனது உறவினரை பார்க்க நேற்றுமுன்​தினம் செவ்வாய்க்கிழமை, கீழ்​ப்பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு வந்​தார். அப்​போது சொலமனின் செல்போனுக்கு அழைப்பு வந்​தது. அதில் த.வெ.க. பாடல் ரிங்​ டோ​னாக ஒலித்​தது.

அப்போது அருகில் இருந்த தி.மு.க. நிர்வாகிகள் கோபத்தில் சொலமனை தகாத வார்த்தைகளில் விமர்சித்தபடி கடுமையாக தாக்கியுள்ளனர். தலைப் பகுதி, கண் அருகே தாக்கியதில் ரத்தம் கொட்டியது.

இதுகுறித்து சொலமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், –

‘என் செல்போனில் த.வெ.க. பாடலை ரிங்டோனாக வைத்துள்ளேன். மருத்துவமனையில் இருப்பதால் பேசக்கூடாது என்று கட் செய்தேன். எனக்கு மீண்டும் அழைப்பு வந்தது.
அப்போது அருகில் இருந்த திமுக நிர்வாகி என்னை அசிங்கமாக திட்டினார். ‘இவங்கள் என்ன ஜெய்சிட்டு ஓவரா ஆடுறாங்க. எல்லோரையும் வெட்டுவேன் என்று மிரட்டினார்.

சம்​பவம் குறித்து சொலமன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். கீழ்ப்​பாக்​கம் பொலீ​ஸார் நடத்திய விசா​ரணை​யில், தாக்​குதலில் ஈடு​பட்​ட​வர்​கள் சேத்​துப்​பட்டு பகு​தி​யைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய​வந்​தது. பொலீ​ஸார் இரு​வரை​யும்​ கைது செய்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​. என்றார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles