உள்நாட்டுத் துப்பாக்கியுடன் மட்டக்களப்பில் ஒருவர் கைது

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று 7ஆம் திகதி வியாழக்கிழமை இரவு வயல்பகுதில் வைத்து கைதுசெய்துள்ளனர் என கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த வயல் பகுதியில் உள்ள கொட்டகையை முற்றுகையிட்டு அங்கு சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட உள்ளுர் தயாரிப்பான சிறிய ரக துப்பாக்கி ஒன்றை மீட்டதுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய விவசாயி ஒருவரை கைதுசெய்தனர்.

இதில் கைதுசெய்யப்பட்டவரை ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles