அமெரிக்க குடியுரிமை குறித்த ட்ரம்பின் உத்தரவை நிராகரித்த நீதிமன்றம்

அமெரிக்க மண்​ணில் பிறக்​கும் குழந்​தைகளுக்கு வழங்கப்படும் தானி​யங்கி பிறப்புரிமை குடி​யுரிமை​யைக் கட்டுப்படுத்​தக் கோரி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்​பித்த நிர்​வாக உத்​தரவை அமெரிக்க உயர் நீதிமன்றம் அதிரடி​யாக நிராகரித்துள்​ளது.

அமெரிக்க அரசி​யலமைப்​பின் 14ஆவது திருத்​தத்​தின்​படி, 1868ஆம் ஆண்டு முதல் அந்​நாட்டு மண்​ணில் பிறக்​கும் பெரும்பாலான குழந்​தைகளுக்​குத் தானாகவே குடி​யுரிமை வழங்​கப்​பட்டு வருகின்றது. இந்த நடை​முறையை மாற்றி அமைக்​கும் நோக்​கில், ஜனாதிபதி ட்ரம்ப் நிர்​வாக உத்​தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்​தார்.

தற்​போதைய குடி​யுரிமை கொள்​கையை ஒரு அவமானம் என்று ட்ரம்ப் விமர்​சித்​திருந்​தார். அதே​போல், அமெரிக்​கத் துணை ஜனாதிபதி ஜே.டி.​வான்​ஸ், இது உலகிலேயே மிக​வும் முட்டாள்தனமான குடியேற்​றக் கொள்கை என்று முன்பு குறிப்பிட்டிருந்தார். இதற்கு சட்ட ரீதி​யாகப் பலத்த எதிர்ப்​பு​கள் கிளம்​பிய நிலையில், இதுதொடர்​பாக உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, 14ஆவது திருத்​தத்​தின் நீண்​ட​கால விளக்​கம் தவறானது என்று ட்ரம்ப் நிர்​வாகம் நீதி​மன்​றத்​தில் வாதிட்​டது. அமெரிக்​க குடிமக்​கள் அல்​லாதவர்​களுக்​குப் பிறக்​கும் குழந்தைகள் அமெரிக்கா​வின் அதி​கார வரம்​பிற்​குள் வரமாட்டார்​கள் என்​றும், எனவே அவர்​களுக்​குத் தானாகவே குடி​யுரிமை பெற உரிமை இல்லை என்​றும் டொனால்ட் ட்ரம்ப் தரப்பு வாதிட்​டுள்ளது.

ஆனால், ட்ரம்ப் நிர்​வாகத்​தின் இந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்​றம், 6-3 என்ற நீதிப​தி​களின் பெரும்பான்மை வாக்​கு​கள் அடிப்படை​யில், அமெரிக்க மண்​ணில் பிறக்​கும் அனைவருக்கும் பிறப்​புரிமை குடி​யுரிமை வழங்​கு​வதை உறு​தி செய்​து தீர்ப்பளித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles