தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு இடையூறாகவுள்ள 717 மதுபான விற்பனை நிலையங்களை 2 வாரத்துக்குள் மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மது விற்பனை மூலம் 48 ஆயிரத்து 344 கோடி ரூபாய் வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள போதிலும் இதனால் பல குடும்பங்கள் பாதிக்குள்ளாகியுள்ளன என்று தமிழ்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடிப்படையாக கொண்டே மதுபான கடைகளை மூடுமாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
வழிபாட்டு தலங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் என்பவற்றுக்கு அண்மையாக உள்ள 717 மதுபான நிலையங்களே இவ்வாறு மூடப்படவுள்ளன.
