‘யார் மீதும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அனைவரும் தத்தமது பதவி வேறுபாடின்றி சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டும் – இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கா.
மாத்தளையில் இன்று – மே 12ஆம் திகதி நடந்த விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘தங்களுக்கு எதிராக இந்தச் சட்டம் ஒருபோதும் செயல்படாது என்று எதிர்பார்க்கும் குழுக்கள் இருக்கின்றன. அவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தனர். தங்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
விசாரணையின்போது யாருடைய பெயராவது குறிப்பிடப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்வது பேரிடராகக் கருதப்படும் கலாசாரம் எமக்கு தேவையில்லை – என்றார்.
ஜனாதிபதியின் உரைக்கு சற்றுமுன்னதாகவே இன்றைய தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னாள் மகிந்த ராஜபக்ச முன்னிலையாகி சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
