இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றமைக்காக விஜயக்கு தனது எக்ஸ் கணக்கு மூலமாக ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க நேற்று திங்கட்கிழமை வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அதில் அவர், ‘இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வர்த்தகம் மற்றும் தலைமுறைகள் கடந்த மக்கள் உறவுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இலங்கையும் இந்தியாவும் இரு தரப்பு உறவுகளையும் கூட்டாண்மையையும் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், எதிர்காலத்தில் மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளும் முன்னேற்றங்களும் உருவாகும்’, என்று அவர் தனது வாழ்த்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும்முகமாக விஜய், ‘இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துகளால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன். உங்களது அன்பான இந்தச் செயலுக்கு எனது நன்றிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles