மலேசியாவின் பாலிங், கம்போங் கெதெம்பா லுவார் (Kampung Ketemba Luar,) பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் இன்று சுமார் 5 மீட்டர் நீளமும் 80 கிலோகிராம் எடையும் கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டது.
மக்கள் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மலேசிய பாதுகாப்பு படையினர், சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர்.
நிலையற்ற வானிலை காரணமாக, உணவு தேடி பாம்பு அந்தப் பகுதிக்குள் வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
