அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவை சென்றடைந்துள்ளார். அங்கு அவருக்கு மிகப்பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
எயார்போர்ஸ் வன் விமானத்திலிருந்து படிக்கட்டுகளில் இறங்கி வந்த ட்ரம்பை சீனாவின் உப ஜனாதிபதி ஹான் ஜெங் காத்திருந்து வரவேற்றார்.
ஹான் சீனாவின் மிக உயர்மட்ட தலைவர்களில் ஒருவர். அவரை ட்ரம்பை வரவேற்க அனுப்புவது அமெரிக்க ஜனாதிபதிக்கு சீனா வழங்கும் உச்ச மரியாதையாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய வரவேற்பை இதுவரை சீனா எவருக்கும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
2017இல் சீனாவுக்கு ட்ரம்ப் சென்றபோது அரச ஆலோசகர் யாங் ஜியேச்சியை வரவேற்றிருந்தார். இதனிடையே, ஹான் கடந்த ஆண்டு நடந்த ட்ரம்பின் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் இந்த சீனப் பயணத்தில் எலான் மஸ்க், ட்ரம்பின் மகன் எரிக் ஆகியோரும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

