ஹமாஸ் அமைப்பினரின் இராணுவப் பிரிவு தலைவரைக் கொன்றதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
பாலஸ்தீனக் அமைப்பினரான ஹமாஸின் இராணுவப் பிரிவு தலைவரான இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் என்பவரைக் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தி கொன்றதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேலில், கடந்த 2023 ஆம் ஆண்டு அக்.7 அன்று நடைபெற்ற தாக்குதலில் 1,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்களில் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் முதன்மையானவர் எனக் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் சூழலில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹதாத் கொல்லப்பட்டதை அவரது குடும்பத்தினர் இன்று உறுதி செய்துள்ளனர்.
முன்னதாக, ஹமாஸ் தலைவரான முகமது சின்வார் கொல்லப்பட்ட பிறகு அந்தப் பதவிக்கு, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
