யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, பலாலி மக்கள் தமது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 16ஆவது வாரமாகவும் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தமது பூர்வீக நிலங்களை நீண்டகாலமாக இழந்து அகதிகளாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.
தமது காணிகளை விரைவில் விடுவித்து, சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
