நல்லூரில் தியாக தீபத்தின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நால்வருக்கு யாழ்ப்பாணம் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
தியாக தீபத்தின் சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் அகற்றப்பட்ட நிலையில், அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தியாக தீபத்தின் நினைவேந்தல் கட்டமைப்பைச் சேர்ந்த பொன் மாஸ்டர் என அழைக்கப்படும் பொன். குணரட்ணம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தியாக தீபத்தின் ஆவணக் காப்பக செயற்பாட்டாளர்களான வரதராஜா பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப. மயூரன் ஆகியோருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
இவர்கள் நாளைய தினம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
