நாட்டில் பல எரிபொருள் நிலையங்களிலும் 95 ஒக்ரேன் ரக பெற்றோல், சுப்பர் டீசல் என்ப கையிருப்பில் இல்லை என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
95 ஒக்ரேன் பெற்றோல், சுப்பர் டீசல் இருப்பை பராமரிக்க 30 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியுள்ளது. எனினும் அந்த எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் பெருநிறுவன எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குக் கிடைக்கும் இலாபம் சுமார் 45 ஆயிரம்ரூபாயாக மட்டுமே உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இந்த இரண்டு வகை எரிபொருட்களும் கிடைப்பதில்லை என்றும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் கூறியுள்ளது.
இதனிடையே, நேற்று – மே 17ஆம் திகதி தொடக்கம் கியூ. ஆர். நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
