அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தினசரி நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.23 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 338.07 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை மாற்றங்கள், இறக்குமதி தேவைகள் மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றின் தாக்கத்தால் நாணய மாற்று விகிதங்களில் தொடர்ச்சியான ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, ரூபாயின் மதிப்பு சரிவு நீண்ட, குறுகிய கால தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
