போர் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு மகிந்தவுக்கு அழைப்பில்லையாம்!

போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 போர் வெற்றியை அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தினம் என்ற பெயரில் கொண்டாடுகிறது. ,தில், பங்கேற்க மகிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்படாதமை குறித்து அவரின் சட்டத்தரணி மனோஜ் கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டதாக அமைச்சர் உபாலி பன்னிலகே வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்தையும் மனோஜ் கமகே இதன்போது மறுத்துள்ளார்.

‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கான எந்தவோர் அழைப்பிதழும் முன்னாள் ஜனாதிபதிக்கு இதுவரை கிடைக்கவில்லை’ என சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டார்.

அத்துடன், பொதுமக்களை தவறாக வழிநடத்தவேண்டாம் என அமைச்சர் உபாலி பன்னிலகேவை தாம் கேட்டுக்கொள்கிறார் என்றும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles