போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனிவா மூலம் தீர்வு வழங்கக்கூடாது – சஜித் பாராளுமன்றில் வலியுறுத்து

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனிவா மூலமாக தீர்வு வழங்கக்கூடாது – இவ்வாறு தெரிவித்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு நன்றி செலுத்துகிறோம். அரசியல் கொள்கைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களுக்கு உரிய பாராட்டை வழங்கத் எமது கட்சி தயங்காது. அத்துடன், போரில் உயிரிழந்த சகல படையினருக்கும் அஞ்சலி செலுத்துகிறோம் – என்றும் அவர் கூறினார்.

மேலும், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனிவா மூலமாக தீர்வு வழங்கக்கூடாது. எமது நாட்டின் பிரச்சனைகளை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும். உள்ளக பொறிமுறை ஊடாகவே தீர்வு வழங்கப்பட வேண்டும் – என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles