ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கா நாளை புதன்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளார்.
ஜனாதிபதியின் வருகையை ஒட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பயணத்தில் ஜனாதிபதி, ‘கிழக்கு மாகாணத்தில் வளர்ச்சியே இலக்கு மக்களுக்காக ஒன்றிணைந்து நாட்டை உருவாக்குவோம்’ என்ற கருத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை மக்கள் பாவனைக்கு கையளிக்கவுள்ளார்.
நாளைய தினம் 34.5 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைப்பார். இதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்துக்கு தலைமை தாங்குவார். இதைத் தொடர்ந்து முழுநாடும் ஒன்றாக என்ற தேசிய செயல்திட்ட நிகழ்வு வெபர் மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
