ஹோர்முஸ் நீரிணை எங்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
‘ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாது. எங்கள் படையினர் முற்றுகையின் மூலம் ஹோர்முஸ் நீரிணை எங்களது முழு கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அணு சக்திப் பொருட்களை ஈரான் வைத்திருப்பதை அமெரிக்க அனுமதிக்காது.
நாங்கள் அதைப் பெறுவோம். அதைப் பெற்ற பிறகு அதனை அநேகமாக அழித்துவிடுவோம். ஆனால்இ அதை அவர்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம். ஹோர்முஸ் நீரிணை சர்வதேச கப்பல் போக்குவரத்து மட்டுமே திறந்திருக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.
அங்கு எதுவித தடையுமின்றி போக்குவரத்து இயங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். சுங்க வரி கட்டணங்கள் வேண்டாம். அது ஒரு சர்வதேச நீர்வழிப் பாதை’ – என்றார்.
