“தமிழகத்திற்கு வருவேன்” விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடிய மலேசிய பிரதமர்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெள்ளிக்கிழமை தமிழகத்தின் புதிய முதல்வர் சி. ஜோசப் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். தமிழக மக்களுக்காக மிகப்பெரிய கடமையை ஏற்றுக்கொண்டிருக்கும் விஜய்க்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருவது குறித்தும் அவர் தொலைபேசி உரையாடலின்போது விஜய்யிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமன்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடத்தப்போவதாகவும் பிரதமர் அன்வார் கூறியிருக்கிறார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்பொழுது தமிழகத்திற்கும் வருகை தர இருப்பதாகவும் அன்வார் கூறியிருக்கிறார். மக்களின் நல்வாழ்வுக்காகவும் தமிழகத்தின் சிறந்த நிறைவான எதிர்காலத்திற்காகவும் மாநிலத்தை சிறந்த முறையில் நிர்வகிக்கும் வலிமையை விஜய்க்கு அளிக்க வேண்டும் என அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles