கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் தாயொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கிளிநொச்சி – கரடிப்போக்கு – உருத்திரபுரம் வீதியில் இன்று – மே 25ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உருத்திரபுரத்திலிருந்து கரடிப்போக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவரை கரடிப்போக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி அதிவேகமாக பயணித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், இளம் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முன்னதாக, விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்று சாகசத்தில் ஈடுபட்டிருந்தனர் என்று விபத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்தனர்.
பாடசாலையிலிருந்து மகளை வீட்டுக்கு ஏற்றிவருவதற்காக சென்ற தாயாரே இந்த விபத்தில் உயிரிழந்தார். அத்துடன், இளைஞர்களில் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
