இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவை கொழும்பு – கடுவலை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ இன்று – மே 25ஆம் திகதி கைது செய்யப்பட்டார். தலங்கம பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக வந்தவரை விசேட பொலிஸ் குழு கைது செய்தது.
அவர் இன்று பிற்பகல் கடுவலை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து நீதிவான் அவரை பிணையில் செல்ல அனுமதித்தார்.
கடந்த மே 18ஆம் திகதி பத்தரமுல்லையிலுள்ள போர் வீரர்கள் நினைவுத்தூபியில் அஞ்சலி ஒத்திகையை குழப்ப முயன்றார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
