காஸாமீது தமது படைகள் நடத்திய தொடர் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இராணுவ பிரிவு தளபதியான முகமது ஓடே கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நேற்று செவ்வாய்க்கிழமை காஸாமீது தொடர் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் 6 வயது சிறுமி உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர் என்று காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காஸாமீதான தாக்குதலில் ஹமாஸ் இராணுவ பிரிவு தளபதியான முகமது ஓடே கொல்லப்பட்டார் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால்இ இஸ்ரேலின் இந்த அறிவிப்பை ஹமாஸ் உறுதி செய்யவில்லை.
முகமது ஓடே இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய ஒக்ரோபர் 7 தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவர் என்று கூறப்படுகிறது.
