யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளார் என ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது பெரிய உளுக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ். தில்ஹால் சதுரங்க என்ற 30 வயதுடையவர், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த அவரது மனைவி வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான சொகுசு பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
