மலேசியாவின் நூற்றாண்டுகள் பழைமையான ஓடியன் திரையங்கில் பெரும் தீ விபத்து

நூற்றாண்டுகள் பழமையான ஓடியன் திரையரங்கில் தீ பற்றியது. இதனால் அவ்விடத்தில் பரபரப்பு மூண்டது. தீ திரையரங்கின் பாதிப் பகுதியை அழிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டிருந்த இந்த இரண்டு மாடிக் கட்டடம் மக்களின் மகிழ்விடமாகத் திகழ்ந்தது.

இரவு 8.50 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், ஜோர்ஜ் டவுனில் உள்ள அப்பர் பினாங்கு சாலையில் உள்ள சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் 10 நிமிடங்கள் கழித்து வந்தடைந்தடைந்தனர் எனவும் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவ தொடர்பாக எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட ஓடியன், 1940கள் முதல் 1960கள் வரை ஹொலிவூட் கிளாசிக் மற்றும் மலாய் திரைப்படங்களைத் திரையிட்டது. இது 1999-2001 வரையான காலப்பகுதியில் மூடப்பட்டு, சில ஆண்டுகள் காலியாக இருந்தது. பின்னர் முக்கியமாகத் தமிழ் திரைப்படங்களைத் திரையிடுவதற்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதன் இறுதித் திரையிடல் ஜூலை 2014 இல் நடந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்தக் கட்டடம் ஒரு ஊடாடும் அருங்காட்சியகம், சிற்றுண்டிச்சாலை மற்றும் இரவு விடுதியாக மாற்றப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles