புதுடில்லி உணவகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

தெற்கு டில்லி மாள்வியா நகரில் உள்ள ஓர் உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 21 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் வெளிநாட்டவர் என்று தெரியவந்துள்ளது.

இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் தெற்கு டெல்லி தீயணைப்புத் துறைக்கு, மாள்வியா நகரில் உள்ள பிரபலமான ‘லெமன் கிறீன்’ என்ற உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. நிலைமையின் தீவிரத்தை அறிந்து 10இற்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன.

தீ விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் அவர்களில் பலர் வெளிநாட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையை டில்லி பொலிஸார் உறுதி செய்தனர்.மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், தீ விபத்தின்போது கட்டிடத்தின் மேல் தளத்தில் 2 பெண்கள் குதித்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாக காண்போரை பதற வைத்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles