மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கியது த.வெ.க.

தமிழகத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 6 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலையில் முடிவடைகிறது.

இதனால், அந்த இடங்களுக்கு ஜூன் 18ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், 3 இடங்களுக்கு அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சி.வி.சண்முகம் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles