யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஒரு கோடியே பத்து இலட்சம் டொலர் செலவில் இந்தியா புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நெடுந்தீவில் அமைந்துள்ள திட்டப் பகுதிக்கு நேரில் சென்று கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, “இந்த திட்டத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதான மின்விநியோகக் கட்டமைப்புடன் இணைக்கப்படாத, இந்தத் தனித்தனி தீவுப் பகுதி மக்களுக்கு பசுமை ஆற்றலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டமானது, சூரிய சக்தி, காற்றாலை, மின்கலச் சேமிப்பு மற்றும் அவசரத் தேவைகளுக்கான டீசல் மின்பிறப்பாக்கி வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக 4.3 மெகாவோல்ட் மின் உற்பத்தித் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
