முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் 11 பேர் உயிரிழந்தனர் என்று களுத்துறை பொலிஸ் தெரிவித்துள்ளது.
களுத்துறை – ஹொரணை, கல்பாத பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திலேயே நேற்று புதன்கிழமை மாலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து நேர்ந்த போது அந்த முதியோர் இல்லத்தில் 72 வயோதிபர்கள் தங்கியிருந்தனர் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தீப்பரவல் ஏற்பட்டவுடனே விரைந்து செயற்பட்ட மீட்புக்குழுவினரும் பொலிஸாரும் அங்கிருந்த 44 முதியவர்களை எவ்வித உயிராபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
தீப்பரவலை தொடர்ந்து 11 வயோதிபர்கள் திடீரென காணாமல் போயிருந்த நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
தேடுதலின் போது சிலரின் உடலங்கள் மாத்திரம் கண்டெடுக்கப்பட்டன. தற்போது காணாமல் போன 11 பேருமே உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தத் தீபரவலால் படுகாயமடைந்த மேலும் 8 பேர் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சைக்காக ஹொரணை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதியோர் இல்லத்தில் இந்தத் திடீர் தீப்பரவலுக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
