அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையால் மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது திட்டமிடப்பட்டு வருகிறது என்று தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜயவிக்ரம குறிப்பிட்டார்.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சில மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. வர்த்தமானி மூலம் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சுமார் 60 வகையான மருந்து வகைகளின் விலைகளும் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளன.
