சிறு போக உர மானியம் அதிகரிப்பு

சிறுபோகத்தில் நெல் விவசாயத்துக்காக ஹெக்ரெயர் ஒன்றுக்கு வழங்கப்படும் உர மானியத்தை 30 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதைய உரக் கையிருப்பு மற்றும் உர விநியோக செயல்முறை குறித்து தெளிவுபடுத்துவதற்காக ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க, ஒரு மூடை யூரியா உரத்தை அதிகபட்சமாக 10 ஆயிரத்து 200 ரூபாய் என்ற விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசாங்கத்தால் இந்தப் பருவம் முதல் உர மானியமாக வழங்கப்படும் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஹெக்ரெயர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயாக காணப்பட்ட உர மானியம், இந்தப் பருவம் முதல் நெல் விவசாயத்துக்காக ஹெக்ரெயர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சுமார் 48 ஆயிரம் மெற்றிக் தொன் அளவு உரம், நாட்டின் அனைத்து கமநல சேவை நிலையங்கள் ஊடாகவும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், இந்த அளவு போதுமானதாக இல்லை. இதற்கமைய, அரசாங்கம் மேலும் 15 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தைத் தனியார் துறையிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles