மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. ஒருபுறம் செங்கடலில் இஸ்ரேலுக்கு ஹவுதிகள் தடையை அறிவித்துள்ளன. மறுபுறத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவித் தாக்கி வருகிறது. இவற்றுக்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், இந்தப் பிராந்தியத்தில் பெரும்போர் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
யேமன் நாட்டில் இயங்கும் ஹவுதி அமைப்பு செங்கடல் வழியாக இஸ்ரேலின் கப்பல்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளன. மீறிப் பயணிக்கும் கப்பல்கள் இலக்கு வைக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இந்த கடல்வழி உலக வர்த்தகத்தில் முக்கியமானது.எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்தில் பெரும் பங்கு இந்தக் கடல்வழியாகவே நடைபெறுகிறது. இதனால் சர்வதேச கப்பல் நிறுவனங்கள் மீண்டும் அந்த வழியை தவிர்க்கத் தொடங்கியுள்ளன என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேநேரம்இ ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு இஸ்ரேலில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. பல நகரங்களில் மக்களுக்கான அபாய எச்சரிக்கை ஒலி ஒலித்துக்கொண்டே இருக்றிது. கடந்த ஏப்ரல் மாத மோதலுக்கு பிந்தைய முக்கியமான – நேரடி மோதலாக இது பார்க்கப்படுகிறது.
ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக
இஸ்ரேல் விமானப் படை ஈரானின் முக்கிய இடங்களை தாக்கியுள்ளது. தெஹ்ரான் மற்றும் அதன் அருகிலுள்ள இராணுவ தளங்கள் தாக்கப்பட்டன. பாதுகாப்பு கட்டமைப்புகளை இலக்காக கொண்டே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று இஸ்ரேல் கூறுpயுள்ளது.
ஒரேநேரத்தில் மூன்றுமுனைகளில் எழுந்துள்ள இந்தப் பதற்றம் பெரும் போராக மாறலாம் என்று அஞ்சப்படுகிறது. ஏனெனில்> இந்த மோதல் நீடித்தால் உலகளவில் எரிபொருட்களின் விலைகள் உயரும். அத்துடன், செங்கடலின் வர்த்தக பாதை பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு முழுவதும் போர் பரவக்கூடும் என்று கூறப்படுகிறது.
