லண்டனில் கத்திகுத்து: புகலிடக் கோரிக்கையாளர் கைது!

லண்டனில் நேற்று இரவு இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் சூடானை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவருக்கு முகம், கழுத்து மற்றும் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஸ்டாமர், இதனை வெறுக்கத்தக்க சம்பவம் என கண்டித்ததோடு, பாதிக்கப்பட்ட நபருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இதேவேளை இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கும் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ரீபோர்ம் UK கட்சியின் தலைவர் நைஜல் ஃபாரேஜ் சந்தேக நபரின் அடையாளம் மற்றும் குடியேற்ற நிலை ஆகியவற்றை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles