கொதிக்கிறது பசுபிக்: உலகம் முழுவதையும் பாதிக்கும்!

பசுபிக் சமுத்திரத்தின் வெப்பமண்டலப் பகுதியில் தற்போது ‘எல் நினோ’ காலநிலை நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களில் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அமெரிக்காவின் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாகம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்தத் திடீர் வெப்பநிலை அதிகரிப்பானது ஒட்டுமொத்த உலகளாவிய வானிலை அமைப்பிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பசுபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த விசித்திர வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் கடுமையான வறட்சி போன்ற அசாதாரண காலநிலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles