பாங்கொக்கில் கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் சிக்கி 40 பேர் பலி!

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் கொட்டித் தீர்த்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளநீரில் மூழ்கியும், மின்சாரம் தாக்கியும் சிலர் உயிரிழந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளப்பெருக்கு நிலைமை காரணமாக, பாங்கொக்கின் 50 மாவட்டங்களும் அனர்த்த வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் 230 இற்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் பாங்கொக்கின் சில பகுதிகளில் சுமார் 300 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சில வானூர்தி நிலையங்களின் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles