போலி கனடா கடவுச்சீட்டுடன் லண்டன் செல்ல முயன்ற இலங்கையர் தாய்லாந்தில் கைது!

போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற 20 வயதான இலங்கையர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தாய்லாந்தின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணிக்க முயன்றபோது, அவர் சமர்ப்பித்த கனடா நாட்டு பயண ஆவணத்தில் முறைகேடுகள் இருப்பதை குடிவரவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து குறித்த நபர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என தாய்லாந்து குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் இலங்கையர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன், குடிவரவு சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காக போலி கனடா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பல்வேறு பயணப் பாதைகளை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles