கோட்டாபய தாக்கல் செய்த மனு நாளை பரிசீலனைக்கு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்காக நாளை வியாழக்கிழமை (18) அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, இந்த மனுவின் காரணிகளை உறுதிப்படுத்துவதற்காக நாளை அழைக்க உத்தரவிடுவதாக தலைமை நீதியரசர் உத்தரவிட்டார்.

இதற்கமைய, இந்த மனுவை பரிசீலிப்பதற்காக நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் சரத் திஸாநாயக்க ஆகியோரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles