உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் வர்த்தகக் கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மேற்கொண்ட அண்மைய தாக்குதல்கள், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டிருந்த தற்காலிக உடன்பாட்டை மீறும் செயல் என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக லெபனானில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு சில மணி நேரங்களிலேயே லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவத்தையடுத்து, பிராந்தியத்தில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மூடும் அதிரடி முடிவை ஈரான் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் இந்த முடிவானது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
