ஈரானில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள் யாரும் ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்கள், அங்கு கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இருப்பினும் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் கோபமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியது. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தற்போது டெஹ்ரானில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
அத்துடன் ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கூறியிருந்த நிலையிலும் இந்தத் தாக்குதல் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இதனால் ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பகுதியும் பெரும் பதற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
