மலேசியாவில் மகள் மீது பாலியல் துன்புறுத்தல்; தந்தை கைது!

மலேசியாவில் தனது சொந்த மகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாலியல் குற்றம் தொடர்பில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

50 வயது மதிக்கத்தக்க அந்த நபர் மாலை மணி 6 அளவில் கைது செய்யப்பட்டதாக செத்தியு மாவட்ட பொலிஸ் தலைவர் தெரிவித்தார்.

ஜூன் 15ஆம் திகதி மாலை அந்த நபரின் 15 வயது மகள் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட சிறுமி தனது இளைய சகோதரியுடன் வீட்டில் இருந்தபோது, ​​மே 29ஆம் திகதி மதியம் சுமார் 12 மணியளவில் அவளது தந்தை இந்த குற்றத்தை புரிந்தார் எனக் கூறப்பட்டது.

இச்சம்பவத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட சிறுமி அதிர்ச்சிக்கும் மனச் சோர்வுக்கும் உள்ளாகியுள்ளார்.

அந்த சிறுமி ஆறு வயதாக இருந்தபோது அவரது தந்தையால் இந்த கொடூர செயலின் பாதிப்புக்கு உள்ளானதாக தெரியவந்தது.

ஜூன் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்த சந்தேகப் பேர்வழி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117-ன் கீழ், இம்மாதம் 27ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்படுவதற்கான விண்ணப்பம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles