உக்ரைனில் ரஷ்யா நடத்திய குண்டுத்தாக்குதலில் 15 பேர் பலி!

தென்கிழக்கு உக்ரைனின் சபோரிஷியா (Zaporizhzhia) நகரில் உள்ள குடியிருப்பு கட்டடங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய குண்டுத்தாக்குதலில் (Glide Bomb attack) மூன்று சிறார்கள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் அவசர கால சேவை அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில், இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா 5 குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் (09) காலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் 16 பேர் காயமடைந்துள்ளதுடன், குடியிருப்பு வளாகம் ஒன்று முற்றாகச் சேதமடைந்துள்ளது, அத்துடன் இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இரவோடு இரவாக மேலும் 13 பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஸெலென்ஸ்கி, “ரஷ்யாவின் இந்தத் தாக்குதல்களுக்குக் கண்டிப்பான பதில் நடவடிக்கை வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய டீசலை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய ஒப்பந்தம் ஒன்றை அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலினால் 80க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு. இடிபாடுகளுக்குள் உயிர் பிழைத்திருப்பவர்களின் சத்தங்களை அடையாளம் காண்பதற்காக மீட்புப் பணிகளின் போது சீரான இடைவெளியில் அமைதி காக்கப்பட்டு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles