கனடாவின் மொன்றியல் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் நிறைந்த, மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ள பகுதியில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபரும் பொலிஸாரின் பதில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
