பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூருக்குச் செல்லும் பேருந்தில் முதல்வர் விஜய் பயணம் மேற்கொண்டார்.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(வியாழக்கிழமை) தொடக்கிவைத்தார்.

இதன்பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பெரம்பூர் செல்லும் 29ஏ பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துனருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் அந்த பேருந்தில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். நடத்துனரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொண்டார். மேலும் நடத்துனரை தனது இருக்கைக்கு அருகே அமர்த்தி அவருடன் பேசிக்கொண்டே பயணித்தார்.

அதுமட்டுமன்றி பேருந்தில் பயணித்தபோது தனது போனில் வீடியோ எடுத்துக்கொண்டார். பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் மற்றும் வழியில் நின்றவர்களை முதல்வர் தனது போனில், வீடியோ எடுத்தார்.

தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை சென்ற முதல்வர், அதே பேருந்தில் மீண்டும் தலைமைச் செயலகம் திரும்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles