பிரித்தானியாவில் தற்போதைய வானிலை நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான உகந்த சூழலை அளிப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற நோய்களைப் பரப்பும் நுளம்புகள் வேகமாக அதிகரிப்பதாக லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பாடசாலையைச் சேர்ந்த டாக்டர் மொஜ்கா கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
ஆசியாவில் பரவும் டெங்கு நுளம்புகள் ஐரோப்பாவில் இல்லை என்றாலும் தற்போது அதன் முட்டைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 2060 களில் டெங்கு லண்டனில் ஒரு உள்ளூர் நோயாக மாறக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெப்பநிலை உயர்வால், சமீபத்திய ஜூன் மாத மழையானது கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்குப் போதுமான இடங்களை வழங்கியுள்ளதால், சுற்றுச் சூழலை பாதுகாப்பாக வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
