மலேசியாவின் லெங்கோங்கில் உள்ள தாசேக் ராபான் என்ற இடத்தில் நேற்று ஓர் உணவகத்திற்கு அருகே நடந்த இரு வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் பலியானதோடு, ஐந்து பெண்கள் காயமடைந்தனர்.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாடுகளுக்கான உதவி இயக்குநர் சபரோட்சி நூர் அஹ்மத் கூறுகையில், இந்த விபத்தில் ஹோண்டா ஒடிஸி பலநோக்கு வாகனத்தின் பின் இருக்கையில் பயணித்த 47 வயதான ஜுரைடா அபு பக்கர் மற்றும் டொயோட்டா வியோஸ் காரின் ஓட்டுநரான 41 வயதான மெல்விந்தர் சிங் கமும் சிங் ஆகியோர் உயிரிழந்தனர்.
மாலை 4.57 மணிக்கு விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், லெங்கோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் சபரோட்சி கூறினார்.
தங்கள் வாகனங்களில் சிக்கியிருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை சுகாதாரப் பணியாளர்கள் உறுதி செய்தனர என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். சடலங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்களுக்கு சுகாதார அமைச்சகப் பணியாளர்கள் சிகிச்சை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
