தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு ம.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ம.தி.மு.கவின் 32 ஆவது பொதுக்குழு, கட்சியின் அவைத் தலைவர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் இன்று நடைபெற்றது.
இதில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார்.
பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ரொஹையா, மு.பூமிநாதன், சு.ஜீவன், சி.கிருஷ்ணன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் ஒன்றே மேற்படி தீர்மானமாகும்.
ம.தி.மு.க., த.வெ.கவுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
