அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய் சிறைச்சாலை பஸ்ஸுக்குள் இருந்து சீறிய பிள்ளையான்

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவரை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.தர்சினி இன்று உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலை வாகனத்துக்குக் கொண்டுசெல்வதற்காக பிள்ளையான் சிறைச்சாலை பஸ்சுக்குள் ஏற்றப்பட்டார்.

சிறைச்சாலை பஸ்சுக்குள் இருந்த அவரிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியவேளையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ஐந்து ஆள்கொலைகள் தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் மற்றும் பிற சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த 15ஆம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள பிள்ளையான், நீதிமன்றக் கட்டளையின் கீழ் இன்று பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஐந்து ஆள்கொலைகள் தொடர்பில் சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகள் மற்றும் கல்லடியில் உள்ள காணிப் பிரச்சினை ஒன்று தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் என இருவேறு விவகாரங்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இன்றைய விசாரணையின் போது சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். பிள்ளையான் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அவரை மட்டக்களப்பு சிறைச்சாலையிலேயே தடுத்து வைப்பதற்கான கோரிக்கையையும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வழக்கை சாதாரண சட்டத்தின் கீழ் இயங்கும் வழக்குக்கு மாற்றுமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

வழக்குகளைப் பரிசீலித்த நீதிவான் அ.தர்சினி, கொலை வழக்குகள் தொடர்பில் பிள்ளையானை ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், கல்லடி காணிப் பிணக்கு தொடர்பான வழக்கை ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles