நீர்கொழும்பு சிறையில் கைதிகளுக்கு இடையில் மோதல் – 20 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தையடுத்து சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளும் பாதுகாப்பு தரப்பினரும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

காயமடைந்த 20 கைதிகளும் சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles