கனடாவில் மானுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!

கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் நள்ளிரவில் நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2:20 மணியளவில், பார்டிபாக் பகுதியில் உள்ள ‘ரூட் 8’ (Route 8) நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்பாராதவிதமாக அங்கு குறுக்கே வந்த பெரிய மான் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான விபத்து குறித்து தகவல் அறிந்ததும் டிராக்காடி, நெகுவாக் மற்றும் ஷாலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மான் மீது மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 36 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் அவர் நியூ பிரன்சுவிக்கின் பாத்தர்ஸ்ட் நகரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த மற்றொரு நபர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நள்ளிரவில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles