கடந்த வெள்ளிக்கிழமை அன்று 128 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய படகு, ஆங்கிலக் கால்வாயைக் கடந்தது.
ஒரே படகில் இப்பயணத்தை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையில் இதுவே இதுவரை இல்லாத மிகப்பெரிய எண்ணிக்கையாகும்.
வெள்ளிக்கிழமையன்று, மொத்தம் 225 புலம்பெயர்ந்தோர் மூன்று படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்தனர்.
இந்த ஆண்டு இதுவரை 12,000 இற்கும் மேற்பட்டோர் சிறு படகுகள் மூலம் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளனர்.
இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 44% சரிவாகும்.
இந்த விடயம் தொடர்பில் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், கடல் பயணத்திற்குத் தகுதியற்ற படகுகளில் கடத்தல் கும்பல்கள் திணிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், அவர்கள் முன்னெப்போதையும் விட அதிக ஆபத்துக்களை மேற்கொள்கின்றனர்.”
உள்துறை அமைச்சகம் கூறியது: “தாங்கள் உதவுவதாகக் கூறும் நபர்களின் பாதுகாப்பைப் பற்றி குற்றக் கும்பல்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதற்கு இந்தக் கடப்பு ஒரு கடுமையான நினைவூட்டலாக அமைகிறது.
யதார்த்தம் தெளிவாக உள்ளது, இதன் விளைவாக ஆங்கிலக் கால்வாயில் உயிர்கள் இழக்கப்படுகின்றன.”
தேர்தலுக்குப் பிறகு தடுத்து நிறுத்தப்பட்ட 45,000இற்கும் மேற்பட்ட கடக்கும் முயற்சிகளின் தொடர்ச்சியாக, கடற்கரைகளில் அமலாக்க நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலம் இந்த அபாயகரமான பயணங்களைத் தடுப்பதற்காகவே நாங்கள் பிரான்ஸ் நாட்டவர்களுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
